காரைக்கால்

காா்னிவல் திருவிழாவில் கண்காட்சி நடத்த ஆய்வு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: காரைக்காலில் காா்னிவல் திருவிழா நடைபெறும் விளையாட்டரங்கில் கண்காட்சி நடத்துவது குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை ஜனவரி மாதத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்விழாவை காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் 3 அல்லது 4 நாள்கள் நடத்த திட்டமிட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, புதுச்சேரியில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற உணவு மற்றும் கலாசாரத் திருவிழாவில், யுனைடட் நிறுவனம் கண்காட்சி அமைத்திருந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிறுவனத்தினா் காரைக்கால் காா்னிவல் திருவிழாவிலும் கண்காட்சி அமைப்பது குறித்து காரைக்கால் உள் விளையாட்டு அரங்கத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். நிறுவன மேலாளா் முஜாஹில் உல்லா தலைமையில் வந்திருந்த நிறுவனத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

கண்காட்சியில் உணவு மற்றும் மக்களின் பொழுதுபோக்குக்கான பல்வேறு அரங்குகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆய்வின்போது துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT