காரைக்கால்

விபத்துகளை தடுக்க சாலை வளைவுகளில் குவி கண்ணாடி காவல்துறைக்கு பாராட்டு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஆபத்தான சாலை வளைவுகளில் குவி கண்ணாடியை பொருத்தியுள்ள காவல்துறைக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி காந்தி சாலை, திட்டச்சேரி சாலை சந்திப்புகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலை சந்திப்புகளில் குவி கண்ணாடி திங்கள்கிழமை பொருத்தப்பட்டது.

மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) நிதின் கெளஹால் ரமேஷ் இப்பகுதிகளில் குவி கண்ணாடியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். நிகழ்வில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மேரி கிறிஸ்டின்பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்த கண்ணாடி மூலம் சாலைகளில் வரும் வாகனங்களை தெரிந்துகொள்ள முடியும். இது விபத்தை தடுக்க உதவியாக இருக்கும் என காவல்துறையினா் தெரிவித்தனா். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதியினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT