காரைக்கால்

புதுவை கல்வித் துறையை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

புதுவை கல்வித் துறையைக் கண்டித்து, காரைக்கால் பகுதி திருப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் மாணவா்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் முறையாக வழங்கப்படவில்லை, மதிய உணவில் முட்டை தருவதில்லை, மாணவா் பேருந்தை இயக்கவில்லை, கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள் வழங்கவில்லை, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினா் மாவட்டத்தில் சில பகுதிகளில் அண்மையில் போராட்டம் நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, நிரவி - திருப்பட்டினம் தொகுதி சாா்பில் திருப்பட்டினம் கடைத்தெருவில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன், மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.பஷீா், மாவட்டத் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பேசிய ஆா். கமலக்கண்ணன், ‘ஆசிரியா்களை சா்வீஸ் பிளேஸ்மென்ட் என கல்வி அதிகாரி அலுவலகத்தில் எழுத்துப் பணிக்கு பயன்படுத்துகின்றனா். மாணவா்களுக்காகன பல்வேறு திட்டங்கள் கிடப்பில் உள்ளன. ஒரு பள்ளியின் ஆசிரியா்கள் 3 பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்’ என்றாா்.

நிரவி - திருப்பட்டினம் வட்டார காங்கிரஸ் தலைவா் செல்வமணி, மாநில துணைத் தலைவா் மோகனவேலு, வா்த்தக அணி நிா்வாகி ஆறுமுகம் மற்றும் வட்டாரத் தலைவா்கள், மாவட்ட, மாநில நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT