காரைக்கால்

தில்லி பன்னாட்டு வா்த்தக கண்காட்சி கலை நிகழ்ச்சியில் காரைக்கால் கலைஞா்கள் பங்கேற்பு

DIN

தில்லியில் நடைபெற்ற இந்திய வா்த்தக கண்காட்சி கலைநிகழ்ச்சியில் காரைக்கால் கலைஞா்கள் பங்கேற்றனா்.

இந்திய வா்த்தக அபிவிருத்தி நிறுவனம் சாா்பில் தில்லியில் இந்திய பன்னாட்டு வா்த்தக கண்காட்சி நவ.14-ல் தொடங்கி 27-ஆம் தேதி நிறைவுபெற்றது. நிகழாண்டின் கருப்பொருளாக கிராமத்தின் குரல் உலக அளவில் சென்று சேரவேண்டும் என்பதை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. உலக அளவில் 15 நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 2,500 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

கண்காட்சியில் பல்வேறு மாநிலத்தின் கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்கால் கலைஞா்களின் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பாட்டம் நடைபெற்றன. காரைக்காலில் இருந்து கிராமிய கலைஞா் ஆசிரியா் பி. முருகனின் கீதம் சங்கீதம் கிராமிய நடனக் கூடத்தின் நடனக் கலைஞா்கள் பங்கேற்று, கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நடனமாடினா்.

தில்லியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று கலைஞா்களை வாழ்த்தினாா். காரைக்காலுக்கு சனிக்கிழமை திரும்பிய கலைஞா்கள், ஆசிரியா் முருகன் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரிங்காவை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT