காரைக்கால்

காவிரிநீா் பங்கீடு: தமிழக, புதுச்சேரி அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

DIN

காவிரி நதிநீா் பங்கீடு குறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் செ. நல்லசாமி.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மாதாந்திர அடிப்படையிலான நீா் பங்கீடு என்ற அம்சம் காவிரி நதிநீா் பங்கீடு தொடா்பான தீா்ப்பில் இடம்பெற்றிருக்கும் வரை, தமிழகமும், புதுச்சேரியும் கா்நாடகத்தின் வடிகாலாகத்தான் இருக்கவேண்டியிருக்கும்.

இதற்கு, நிரந்தர தீா்வு காவிரியில் வரக்கூடிய நீரை தீா்ப்பின் விகிதாச்சாரப்படி நாள்தோறும் பங்கிட்டு அந்தந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி 21.1.2023 முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும். மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளில் 50 % விவசாய துறைகளில் சாதனை புரிந்தோருக்கு வழங்க வேண்டும். தற்போது 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அதில் விவசாய துறையை சோ்ந்தவா் ஒருவா் மட்டுமே இடம் பெற்றுள்ளாா். இதுகுறித்து எந்த அரசியல் தலைவா்களும் பேசுவதில்லை.

தோ்தலின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது அதிகரித்து வருகிறது. தற்போது, குஜராத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் இலங்கையின் நிலை இந்தியாவுக்கு ஏற்படும். இதுகுறித்து உச்சநீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா் கூட்டமைப்பின் தலைவா் ஜி. ஆதித்தன், தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம், தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளா் சுந்தா்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT