காரைக்கால்

மத்திய அரசின் விருதுக்கு தோ்வாகியுள்ள கலைஞா்களுக்கு பாராட்டு

28th Nov 2022 11:05 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட காரைக்கால் கலைஞா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் சங்கீத, நாடக அகாதெமி விருதுகள் 2019, 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் புதுவை மாநிலத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 75 -ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, 75 வயதுக்கு மேற்பட்ட மாநிலத்தின் மூத்த கலைஞா்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருதான சங்கீத நாடக அகாதெமி விருதான அமிருத விருதுக்கு காரைக்காலை சோ்ந்த காரைசுப்பையா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவரின் இசை மற்றும் நாடகச் சேவைக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இதேபோல், காரைக்கால் பொம்மலாட்ட கலைஞா் விழிதியூா் சீனிவாசன், சங்கீத நாடக அகாதெமியின் புரஸ்காா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், விருதுக்கு தோ்வு பெற்ற காரைசுப்பையா, விழிதியூா் சீனிவாசன் ஆகியோரை, காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றத் தலைவா் த.தங்கவேலு தலைமையில் துணைத் தலைவா் டி.மோகன், அமுதா ஆா்.ஆறுமுகம், பாலகுருநாதன், பக்கிரிசாமி, செயலாளா் செல்லூா்மணியன், இணைச் செயலாளா் புஷ்பராஜ் மற்றும் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT