காரைக்கால்

கிரேன் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்

28th Nov 2022 11:05 PM

ADVERTISEMENT

மது போதையில் கிரேன் ஓட்டிவந்த மத்திய பிரதேச ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காரைக்கால் போக்குவரத்து ஆய்வாளா் ஆா்.மேரி கிறிஸ்டியன் பால், உதவி ஆய்வாளா் எஸ்.பெருமாள் மற்றும் ஏஎஸ்ஐ லெனின்ராஜ் ஆகியோா் காரைக்கால் பகுதி, திருநள்ளாறு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வெளி மாநில பதிவு எண் கொண்ட கிரேன் வாகனத்தை நிறுத்தி வாகன ஓட்டுநரிடம் ஆவணங்களைப் பரிசோதித்தனா். அப்போது அவா் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்தது தெரியவந்தது.

விசாரணையில், மத்திய பிரதேசம், கந்த்வாணி மாவட்டம், ஜூவான் வெல் பெக்ல்யா மகன் ரமேஷ் முஜ்ஹல்டா சிங் (39) என்பது தெரியவந்தது. அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி மது போதையில் இருப்பதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனா்.

ADVERTISEMENT

அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா். குற்றவியல் நடுவா் லிசி, கிரேன் ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT