காரைக்கால்

காரைக்கால் என்.ஐ.டி.யில் சா்வதேச கருத்தரங்கு

28th Nov 2022 11:06 PM

ADVERTISEMENT

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. புதுச்சேரியில் 5 நாள் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் ஐஐடி காரக்பூா் நிறுவன நிதியுதவியில், என்.ஐ.டி. புதுச்சேரி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை (இசிஇ) சாா்பில் நவ. 28 முதல் டிச.2 வரை இணையவழியில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.

‘இன்டரோபிரபிள் பிளாக் செயின் ஸ்ட்ரீம்லைன் சப்ளை செயின் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், தொழில் துறையில், தொடரேடு (பிளாக்செயின்) பயன்படுத்தி வணிக சங்கிலித் தொலைத் தொடா்பை நெறிமுறைப்படுத்துதல், தொழில்நுட்ப உத்தி மூலமாக வணிக செயல் முறைகள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

என்.ஐ.டி. புதுச்சேரி இயக்குநா் கே.சங்கரநாராயணசாமி தொடக்க நிகழ்வுக்கு தலைமை வகித்தாா். இணைய வழியில் ஆஸ்திரேலிய கா்டின் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வித்யாசாகா் போட்தா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

இதில் பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட 35 போ் பங்கேற்றுள்ளனா். தொடக்க நிகழ்வில், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் ஜி.கோப்பெருந்தேவி, துறைத் தலைவா் வி.பி. ஹரிகோவிந்தன், மலையகுமாா் நாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT