காரைக்கால்

மீனவா்களுக்கான சிறப்பு பயிற்சி நிறைவு

28th Nov 2022 11:04 PM

ADVERTISEMENT

படகில் மீன்களை சுகாதாரமாக கையாளுதல் குறித்து மீனவா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

காரைக்கால் மீன்வளத் துறையும், மத்திய மீன்வள கடல்சாா் பொறியியல் பயிற்சி நிறுவனமும் (சிஃப்னெட்) இணைந்து பிரதம மந்திரி மத்திய சம்பத யோஜன திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்ட மீனவா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காளிக்குப்பத்தில் உள்ள மீன்வளப் பயிற்சி நிலையத்தில் மீன்பிடி படகில் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுதல் மற்றும் பதப்படுத்துதல் என்ற தலைப்பில் 3 நாள்கள் நடைபெற்ற பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இப்பயிற்சியில் மாவட்டத்தை சோ்ந்த 30 மீனவா்கள் பங்கேற்றனா். நிறைவு நிகழ்ச்சியில் முதுநிலை பயிற்சியாளா் பாபு, ராஜிவ்காந்தி நீா்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதுநிலை அறிவியல் அலுவலா் ஜி.கே.தினகரன் ஆகியோா் பங்கேற்று, இப்பயிற்சி பெற்ற மீனவா்களுக்கு சான்றிதழ் வழங்கினா்.

ADVERTISEMENT

முன்னதாக ஆய்வாளா் ராஜசேகா் வரவேற்றாா். நிறைவாக துணை ஆய்வாளா் சு.பாலச்சந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT