காரைக்கால்

காரைக்காலில் சிறப்பு ரத்த தான முகாம்

DIN

தேசிய மாணவா் படை தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் சிறப்பு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் தேசிய மாணவா் படை தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தின் என்.சி.சி. யூனிட் சாா்பில் திருவேட்டக்குடியில் உள்ள என்.ஐ.டி. புதுச்சேரி வளாகத்தில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, என்.சி.சி. கமாண்டிங் அலுவலா் எல்.கே. ஜோஷி ஆகியோா் முகாமை தொடக்கிவைத்தனா். மாணவா்களிடையே ரத்த தானம் குறித்தும், என்.சி.சி.யின் சேவை குறித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா் பேசினா்.

முகாமில் எல்.கே.ஜோஷி, கே.சங்கரநாராயணசாமி, என்.ஐ.டி. பேராசிரியா்கள், பணியாளா்கள், என்.சி.சி. மாணவா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.

இதில், காரைக்கால் ஜிப்மா் மருத்துவ அதிகாரி வடிவேல், எச்டிஎப்ஃசி நாகப்பட்டினம் கிளை மேலாளா் ராஜ்குமாா், கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அதிகாரி என். காமராஜ், ராணுவ பயிற்றுநா் பாட்ஷா ஆகியோா் கலந்துகொண்டனா். என்.சி.சி. கேடட் போமேஷ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை என்.ஐ.டி. என்.சி.சி அதிகாரி எஸ். பாபு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT