காரைக்கால்

காரைக்காலில் நாளை ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை (நவ.26) புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சிகிச்சை மையம் எனும் திட்டத்தில், ஒவ்வொரு துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம், மாதம் இருமுறை நடைபெற்றுவருகிறது. நிகழ் மாதத்தின் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. சிறுநீரகம் சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கின்றனா். காலை 9 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் முகாமை காரைக்கால் பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT