காரைக்கால்

காரைக்கால் சிவன் கோயில்களில் இன்று சங்காபிஷேகம்

21st Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

காா்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவன் கோயில்களில் மூலவருக்கு 108, 1008 சங்குகளில் நீா் நிரப்பி, சிறப்பு ஹோமம் நடத்தி, சங்கில் உள்ல புனிதநீா் மூலம் சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

கோயில்பத்து நித்தீஸ்வரசுவாமி கோயிலில் அனைத்து சோமவாரத்திலும் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

சோமவார சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை மாலை அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார நாளில் 1008 சங்காபிஷேக வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT