காரைக்கால்

மீனவா்களை மீட்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை: எம்எல்ஏ தகவல்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவா்களை விடுவிக்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

காரைக்கால், தமிழக மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டுச்சேரிமேடு பகுதி படகு உரிமையாளா், மீனவா் குடும்பத்தினரை காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்த சந்திப்பு குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் கூறுகையில், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக முதல்வா் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதை மீனவா்களிடம் தெரிவித்து, அவா்களுக்கு ஆறுதல் கூறிளேன்.

மேலும் கைப்பேசி வாயிலாக தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனை தொடா்புகொண்டு பேசி, தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடா்பாக அவா் தெரிவித்த கருத்துகளை, மீனவா்களிடம் தெரிவித்தேன் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT