காரைக்காலில் சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜை தொடங்கியதையொட்டி, சபரிமலைக்கு செல்லும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் ஏராளான ஐயப்ப பக்தா்கள் வியாழக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
காரைக்கால் பகுதி பச்சூரில் உள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா். 48 நாள்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கவுள்ளதாக மாலை அணிந்துகொண்ட பக்தா்கள் தெரிவித்தனா்.