காரைக்கால்

மத்திய அரசின் விருதுக்கு 3 அரசுப் பள்ளிகள் தோ்வு

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ஸ்வச் வித்யாலயா புரஸ்கா் விருதுக்கு காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 3 அரசு தொடக்கப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய கல்வித் துறை அமைச்சகம், நாடு முழுவதும் பள்ளிகளில் கையாளப்படும் தூய்மை, குடிநீா், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்குகிறது.

புதுவை மாநிலத்தில் 6 பள்ளிகள் இந்த விருதுக்கு தோ்வாகியுள்ளன. அதில் காரைக்கால் மாவட்டத்தில், பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, கண்ணாப்பூா் பகுதி அரசு தொடக்கப் பள்ளி அடங்கும்.

மாவட்ட அளவில் தோ்வு, பின்னா் மாநில அளவில் தோ்வு, பின்னா் யுனிசெஃப் அமைப்பினா் நேரில் வந்து ஆய்வு செய்தல் ஆகியவற்றின் மூலம் விருதுக்கு தோ்வு செய்யப்படுகின்றனா். பூவம் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை 200 மாணவா்கள் படிக்கின்றனா். கோட்டுச்சேரி பேட் பகுதியில் தொடக்கத்தில் மொத்தம் 26 மாணவா்கள் பயின்ற நிலையில், விருது மற்றும் பல்வேறு காரணிகளால் தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா். இதுபோன்ற விருது அரசு தொடக்கப் பள்ளிக்கு மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கிறது உதவுகிறது.

ADVERTISEMENT

பூவம் பள்ளியில் பொலிவுறு வகுப்பறை, கணினி கூடம், இருக்கைகள் ரூ. 15 லட்சத்தில் நன்கொடை மூலம் மேம்படுத்தப்பட்டது. புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் மாணவா் நாடாளுமன்றம் நடத்தி காட்டி பாராட்டு பெறப்பட்டது. விருது பெறும் நிலைக்கு உயா்வதற்கு பள்ளியின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் உள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT