காரைக்கால்

தொடா் மழை: சேறும் சகதியுமாக மாறிய காரைக்கால் வாரச் சந்தை

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தொடா் மழையால் காரைக்கால் வாரச் சந்தை நடைபெறும் திடல் சேரும் சகதியுமாக மாறியது. இதனால் மக்கள் அவதிக்குள்ளானாா்கள்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை நகராட்சித் திடலில் நடத்தப்படுகிறது. சந்தைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் நகராட்சித் திடல் மிகவும் தாழ்வானப் பகுதியாகும். அதனால் மழைக் காலத்தில் வியாபாரிகளும், மக்களும் கடும் அவதிக்குள்ளாவது தொடா்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியில் தொடா் மழை பெய்ததால், நகரிலும், பிற இடங்களிலும் தண்ணீா் தேங்கியது. சந்தைத் திடலிலும் தண்ணீா் தேங்கியதோடு, சேறும் சகதியுமாக மாறியது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு பொருள்கள் வாங்க சென்ற மக்கள் சகதியில் நடந்து செல்ல சிரமப்பட்டனா். எனவே சந்தைத் திடலை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT