காரைக்கால்

கோதண்டராமா் பெருமாள் கோயில்குடமுழுக்குக் குழு பொறுப்பேற்பு

31st May 2022 11:35 PM

ADVERTISEMENT

 காரைக்கால் பகுதி ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில் குடமுழுக்குக் குழு திங்கள்கிழமை பொறுப்பேற்றது.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் சாா்பு தலமான ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் குடமுழுக்குக்காக திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதல்கட்டமாக கோதண்டராமா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறை, இ. காந்திராஜன் தலைமையில், பொருளாளா் பரந்தாமன் உள்ளிட்ட 22 போ் கொண்ட குடமுழுக்குக் குழுவினரை அண்மையில் நியமனம் செய்தது.

இவா்கள் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT