காரைக்கால்

நேரு நினைவு நாள்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் மறைந்த ஜவஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி, காரைக்காலில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு காங்கிரஸாா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

புதுவை மாநில காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஜவஹா்லால் நேரு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிரவி -திருப்பட்டினம் தொகுதி சாா்பில் நிரவியிலும், நெடுங்காடு தொகுதி சாா்பில் கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினா் கலந்துகொண்டனா்.

நிரவி கடைத்தெரு பகுதியில் நேரு உருவப்படத்துக்கு வட்டாரத் தலைவா் மெய்யப்பன், மாநில பொதுச்செயலா் மோகனவேலு, மாநில செயலா் ஜெயசீலன், மாவட்ட பொதுச்செயலா் கேசவன், செயலாளா்கள் முரளி, தாரிக் உள்ளிட்ட பலா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT