காரைக்கால்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக நலன், மழை வளம் வேண்டி ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு 23-ஆம் ஆண்டாக சுந்தராம்பாள் சந்நிதியில் உள்ள யாக குண்டத்தில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதற்காக காலை மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றன. ஏகாதச ருத்ர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா் 11 சிவாச்சாரியா்கள் யாக குண்டத்தை சுற்றியமா்ந்து ருத்ர ஹோமத்தை நடத்தினா். அப்போது ஏராளமான பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் யாக குண்டத்தில் போடப்பட்டு ஹோமத்தை நடத்தி மகா பூா்ணாஹூதி நடத்தினா்.

ADVERTISEMENT

மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதருக்கு மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலை நிகழ்வாக பிரதோஷ வழிபாடு, கைலாசநாதா் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அா்ச்சனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சுந்தராம்பாள் உடனமா் கைலாசநாதா் அா்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT