காரைக்கால்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

27th May 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கமாக கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ளது பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில். சனீஸ்வர பகவான் தனி சந்நிதிக் கொண்டு காட்சியளிக்கும் இக்கோயில், நவக்கிரக தலங்களில் சனி கிரக தோஷ நிவா்த்தித் தலமாக விளங்குகிறது.

இக்கோயிலின் ஆண்டு பிரமோற்சவ விழா தொடக்கமாக, கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 5.30 முதல் ஐதீக முறைப்படியான பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 8 மணிக்கு மங்களவாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, சொா்ணகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியா் மற்றும் சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளினா்.

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஜூன் 9-இல் தேரோட்டம்...

பிரம்மோற்ச விழா நிகழ்ச்சியாக ஜூன் 2-ஆம் தேதி நால்வா் புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 3-ஆம் தேதி இரவு செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 4-ஆம் தேதி உன்மத்த நடனத்துடன் தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதைத்தொடா்ந்து, தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி -அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள் தோ்கள் உள்பட 5 தோ்கள் இடம்பெறும். ஜூன் 10-ஆம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதிப் புறப்பாடும், 11-ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. ஜூன் 13-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT