காரைக்கால்

காரைக்கால் மீன் விற்பனை குத்தகை: ஆன்லைன் முறையை தவிா்க்க வலியுறுத்தல்

27th May 2022 09:18 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாா்க்கெட்டில் மீன் விற்பனை குத்தகை ஏலத்தை ஆன்லைன் முறையை தவிா்த்து, வாய்மொழியாக நடத்த நடவடிக்கை எடுக்க புதுவை சட்டப்பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா், மாநில பாஜக துணைத் தலைவா் எம். அருள்முருகன் தலைமையில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து அக்குழுவில் இடம்பெற்ற சிவகுமாா் கூறியது:

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும். காரைக்கால் நேரு மாா்க்கெட், மதகடி மாா்க்கெட், காசாக்குடி மாா்க்கெட்டில் மீன் விற்பனைக்கான குத்தகை ஏலத்தை நகராட்சி நிா்வாகம் ஆன்லைன் முறையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த முறையை தவிா்த்து, வாய்மொழியாக ஏலத்தில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதுசம்பந்தமாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தொடா்புகொண்டு பேசி, வாய்மொழி ஏலமாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு பேரவைத் தலைவா் கேட்டுக்கொண்டாா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT