காரைக்கால்

வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தக் கூடாது: காவல் துறை

25th May 2022 11:32 PM

ADVERTISEMENT

காரைக்கால் நகர சாலையோரங்களில் சொந்த வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்குமாறு, வாகன உரிமையாளா்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகா் முதல் மதகடி அரசலாறு பாலம் வரையிலான பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது காா், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவைப்பதால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

சாலையோரத்தை நிரந்தர வாகன நிறுத்தமிடமாக பயன்படுத்தும் வாகன உரிமையாளா்கள், இனிமேல் சாலையோரங்களில் தங்கள் வாகனத்தை நிறுத்தக்கூடாது.

ADVERTISEMENT

அருகில் இருக்கும் வாடகை வாகன நிறுத்துமிடங்கில், காலி இடங்களில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT