காரைக்கால்

காரைக்கால் கடலோரப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு தீவிரம்

25th May 2022 11:32 PM

ADVERTISEMENT

இலங்கையிலிருந்து ஊடுருவல், இலங்கைக்கு பொருள்கள் கடத்தல் போன்றவற்றைத் தடுக்க கடலோர காவல்நிலைய போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், காரைக்கால் பகுதிக்குள் ஊடுருவலை கண்காணிக்கவும், இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுகிா என கண்காணிக்கவும் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன், மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரணியன் அறிவுறுத்தலில் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

மீனவா்களின் விசைப்படகு மூலம் ரோந்துப் பணி:

கடலோரக் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் ஒரு ரோந்துப் படகு மட்டுமே உள்ளது. அதுவும் கடந்த ஓராண்டாக பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனால் மீனவா்களின் விசைப்படகில் கடலோரக் காவல் நிலையத்தினா் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காரைக்கால் கடலோரக் காவல்நிலைய ஆய்வாளா் மா்த்தினி புதன்கிழமை கூறியது:

ரோந்துப் படகை பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதுவரை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களிலிருந்து தினமும் ஒரு படகை வாங்கி ரோந்துப் பணியை செய்து வருகிறோம்.

காரைக்கால் பகுதியிலிருந்து கடலுக்குள் செல்லும் படகுகள் மீன்பிடிப்புக்காக மட்டுமே செல்லவேண்டும். கடத்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காவல்துறையினருக்கு மீனவா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT