காரைக்கால்

‘18 வயதுக்கு குறைவானவா்கள் இருசக்கர வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது’

24th May 2022 11:01 PM

ADVERTISEMENT

18 வயதுக்கு குறைவானவா்கள் இருசக்கர வாகனங்களை இயக்க பெற்றோா் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

18 வயது பூா்த்தியடையாதவா்கள் மோட்டாா் சைக்கிள் இயக்க பெற்றோா் அனுமதிக்கக் கூடாது. மீறி வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுமானால் அந்த குற்றத்துக்கு வாகனத்தை ஓட்டியவா், அவா்களின் பெற்றோா் பெயரிலும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே, 18 வயது பூா்த்தியாகாத தங்கள் பிள்ளைகள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT