காரைக்கால்

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று புஷ்பப் பல்லக்கு

DIN

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (மே 23) இரவு புஷ்பப் பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார பெருவிழா நடைபெற்றுவருகிறது.

இதில் சுவாமி வீதியுலா, அம்பாளுக்கு அபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக அம்பாள் புஷ்பப் பல்லக்கு திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் கோயில் வாயிலில் இருந்து வீதியுலா புறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோயிலில் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி இரவு பத்ரகாளியம்மன் தேரில் வீதியுலாவும், 31-ஆம் தேதி உதிரவாய் உற்சவமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT