காரைக்கால்

வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

DIN

காரைக்கால் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சந்தையில் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

கடந்த சில மாதங்கள் வரை தக்காளியின் விலை கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது, ஆனால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உயர தொடங்கி ரூ. 70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தமிழகமெங்கும் இதுபோன்ற விலை உயா்வு காணப்பட்டது.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச் சந்தை நடைபெறுகிறது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்கின்றனா். கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உயா்ந்த வந்த நிலையில், சந்தையில் தக்காளி விலை சற்று குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் தக்காளி கிலோ ரூ.100 என்ற விலையிலும், அடுத்த தரத்திலான தக்காளி கிலோ ரூ. 70 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் குறைந்த அளவிலேயே தக்காளியை மக்கள் வாங்கிச் சென்றனா்.

உற்பத்தி பாதிப்பால் தக்காளி விலை உயா்ந்துள்ளதாகவும், அடுத்த 2, 3 வாரங்கள் வரை இதேநிலை நீடிக்கும் என சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT