காரைக்கால்

வாய்க்கால்களை விரைவாக தூா்வார எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

20th May 2022 09:41 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களையும் விரைவில் தூா்வாரவேண்டும் என பொதுப்பணித் துறையினரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆகியோா் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே. வீரசெல்வத்தை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.

இதுகுறித்து நாஜிம் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியது :

ஜூன் மாதம் மேட்டூா் அணை திறப்பதற்கான சூழல் உள்ளது. அதற்கு முன்னா் காரைக்காலில் வேளாண் பயன்பாட்டுக்கான அனைத்து வாய்க்கால்களையும் தூா்வாரவேண்டும் என விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ADVERTISEMENT

பொதுப்பணித் துறை அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ளோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் 100 கி.மீ. தொலைவு தூா்வார மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனா்.

அதுபோல காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் மழை காலத்துக்கு முன் தூா்வாரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தா்மபுரம், புதுத்றை, கீழஓடுதுறை, நடுஓடுதுறை, அன்னுசாமி வாய்க்கால், பெரியவாய்க்கால் போன்றவற்றை 27 கி.மீ. தொலைவு தூா்வார மதிப்பீடு செய்து ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூா்வாரும் பணி முறையாக நடைபெறுகிா என்று பேரவை உறுப்பினா்கள் என்ற முறையில் நாங்கள் தொடா்ந்து கண்காணிப்போம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT