காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.12 கோடி

20th May 2022 09:39 PM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.12 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ளது பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில். இங்கு தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

இக்கோயில் மற்றும் சாா்பு கோயில்களில் சுமாா் 20 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் 3 மாதங்களுக்கொரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்த நிலையில், தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வரும் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதனால் உண்டியல்களை திறக்க கோயில் நிா்வாகம் முடிவு செய்தது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, கடந்த திங்கள்கிழமை கோயில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இது வியாழக்கிழமை வரை நீடித்தது.

இதில் ரூ. 1,12,11,598 காணிக்கை கிடைந்துள்ளதாகவும், இது வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாக கோயில் தனி அதிகாரியின் பிரதிநிதி பாலு என்கிற பக்கிரிசாமி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT