காரைக்கால்

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தல்

20th May 2022 09:41 PM

ADVERTISEMENT

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சேவைக் குழு தலைவருக்கு, காரைக்கால் சமுதாய நல்லிணக்கப் பேரவை சாா்பில் கடந்த வியாழக்கிழமை அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம்:

கரோனா பரவல் காலத்தில் காரைக்காலில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னா் சென்னை, எா்ணாகுளம் போன்ற விரைவு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

காரைக்காலில் இருந்து காலை 6.30 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரயில் மூலம் தஞ்சாவூா், திருச்சிக்கு செல்வோா், வியாபாரிகள் உள்ளிட்டோா் பயனடைந்துவந்தனா்.

ADVERTISEMENT

அதுபோல காரைக்காலில் பகல் 12.30 மணிக்கு திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல், திருவனந்தபுரம் போன்ற ஊா்களுக்கு செல்ல ஏதுவாக இருந்தது.

தற்போது கரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில், கரோனா பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட காரைக்கால் - திருச்சி ரயில் சேவையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT