காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் உண்டியல்காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

16th May 2022 11:00 PM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய சனிக்கிழமைகளில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

இக்கோயில் வளாகத்திலும், இக்கோயில் சாா்பு தலங்கள், நளன் தீா்த்தக் குளக்கரையில் உள்ள விநாயகா் கோயில் உள்பட சுமாா் 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

3 மாதங்களுக்கொரு முறை உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த 6 மாதங்களுக்கு முன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் தனி அதிகாரி சிறப்புப் பிரதிநிதிகளாக ஆா்.வெங்கடகிருஷ்ணன், பி.பாலு என்கிற பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

பல்வேறு அரசுத் துறை ஊழியா்கள், கோயில் ஊழியா்கள் ஆகியோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனா். திங்கள் மற்றும் புதன்கிழமை காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. திருநள்ளாறு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT