காரைக்கால்

பாலிடெக்னிக் கல்லூரி வளாக நோ்காணல்: 24 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

12th May 2022 11:32 PM

ADVERTISEMENT

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 24 மாணவா்களுக்கு பணி நியமனஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மேன்டோ ஆட்டோமேடிவ் நிறுவன துணைப் பொது மேலாளா் அஜய்குமாா் தலைமையில், மனிதவள அலுவலா் மகேஷ்வரன் உள்ளிட்ட பிரதநிதிகள், நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள், ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் பேசினாா்.

தொடா்ந்து, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ பிரிவு மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில் காரைக்கால் பாலிடெக்னிக் மற்றும் காரைக்கால்மேடு பகுதியில் உள்ள மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

நிறைவில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியை சோ்ந்த 20 பேருக்கும், மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியை சோ்ந்த 4 பேருக்கும் பணி வாய்ப்பு கிடைத்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT