காரைக்கால்

செவிலியா் தின பேரணி

12th May 2022 11:32 PM

ADVERTISEMENT

காரைக்காலில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி செவிலிய கல்வி நிறுவன மாணவ, மாணவியா் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் கல்வி நிறுவனமான அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு நிறுவன காரைக்கால் மையம் சாா்பில் நடைபெற்ற பேரணியை

கல்வி நிலைய முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

செவிலியா்களின் சேவைகளை விளக்கி பதாகை ஏந்தியவாறு மாணவ, மாணவியா் அரசு மருத்துவமனை வளாகத்தை சென்றடைந்தனா். மருத்துவக் கண்காணிப்பாளா் ஜி.கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி எஸ்.மதன்பாபு ஆகியோா் கலந்துகொண்டு சா்வதேச செவிலிய நாள் குறித்தும், செவிலியா்களின் சேவைகள் குறித்தும் பேசினா். தொடா்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT