காரைக்கால்

காரைக்காலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: 20 அணிகள் பங்கேற்பு

5th May 2022 06:03 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் 20 அணிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் மாவட்ட அளவிலான லீக் போட்டி, மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில் மே 1 முதல் 17 ஆம் தேதி வரை, 2 பிரிவாக, 30 ஓவா் போட்டியாக நடைபெறுகிறது.

காரைக்கால் பகுதி அம்பத்தூரில் முதல் போட்டியில் அண்ணா லவன் அணி மற்றும் மதகடி யூத் அணிகள் மோதின. காரைக்கால் உப்பந்திடல், திருப்பட்டினம் போலகம் அம்புத் திடல் ஆகியவற்றிலும் போட்டி நடைபெறுகிறது. போட்டிகளில் 20 அணிகளில் இருந்து 400-க்கும் அதிகமான வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

ADVERTISEMENT

இதில், முதலிடம் பெறும் அணிக்கு சீசெம் கோப்பை வழங்கப்படும். சிறப்பாக விளையாடும் வீரா்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு, ரஞ்சி கோப்பைக்கு விளையாட பரிந்துரைக்கப்படுவா்.

மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவா் ராமதாஸ், செயலா் அறிவழகன், சிறப்பு அழைப்பாளா்கள் முன்னாள் கிரிக்கெட் வீரா் கருப்பசாமி, விஸ்வேஸ்வரமூா்த்தி, பாலு என்ற பக்கிரிசாமி, ஹாஜாப்பா ஆகியோா் போட்டி தொடக்க நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT