காரைக்கால்

ராஜசோளீஸ்வரா் கோயிலில்நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகம்

2nd May 2022 11:01 PM

ADVERTISEMENT

திருமலைராயன்பட்டினம் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் அறுபத்து மூன்று நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு இந்த வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. நாயன்மாா்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, அப்பா், சுந்தரா், திருஞானசம்பந்தா், மாணிக்கவாசகா் உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பிராகார புறப்பாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

உலக நலனுக்காக இந்த வழிபாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவதாக கோயில் அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா். வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT