காரைக்கால்

சிவப்பு அட்டைதாரா்களுக்கு நாளைமுதல் இலவச அரிசி

22nd Mar 2022 10:46 PM

ADVERTISEMENT

கடந்த மாதங்களில் அரிசி வாங்காத, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை (மாா்ச் 24) முதல் இலவச அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், சிவப்பு நிற குடும்ப அட்டை பயனாளிகளுக்கு, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி டிசம்பா் -2021, ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களுக்கு அரிசி வாங்காத அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தற்போது இயங்கும் வாரச் சந்தை குடோன் எண் 6-இல்) 24 மற்றும் 25ஆம் தேதிகளில் காலை 9 முதல் பகல் 1 மணி வரை மற்றும் மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை அரிசி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT