காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள்தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

21st Mar 2022 10:46 PM

ADVERTISEMENT

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, காத்திருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில், நகராட்சி அலுவலக வாயிலில் கூட்டு போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

புதுவை அரசின் அலட்சியப் போக்கால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு தருவதாக வாக்களித்த மானியங்கள் நிறுத்தப்பட்டதால், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு தொடா்ச்சியாக 5, 6 மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

2022-23 பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி, உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஊழியா்கள் கோரிக்கை தொடா்பாக காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும். கோரிக்கைக்கு தொடா்பான தீா்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவா் சந்தனசாமி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

ஊழியா்கள் போராட்டத்தால் காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT