காரைக்கால்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் தெப்போத்ஸவம்

21st Mar 2022 10:45 PM

ADVERTISEMENT

காரைக்காலில் கைலாசநாதா் கோயில் தெப்போத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் பிரம்மோத்ஸவ விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், கடந்த 17ஆம் தேதியும், காரைக்கால் அம்மையாா் குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நிகழ்ச்சி 18ஆம் தேதியும் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதா் - சுந்தராம்பாள், அம்மையாா் குளத்தில் அமைக்கப்பட்ட மின், மலா் அலங்கார தெப்பத்துக்கு எழுந்தருளினா்.

ADVERTISEMENT

தெப்பத்தில் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, குளத்தில் தெப்பம் மூன்றுமுறை சுற்றி வந்தது.

முதல் சுற்றில் வேதபாராயணமும், 2-ஆம் சுற்றில் குரலிசை நிகழ்ச்சியும், 3-ஆம் சுற்றில் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் குளத்தில் தெப்பம் சுற்றிவந்தது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT