காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் நாளைமுதல் தொடா் வேலைநிறுத்தம்

19th Mar 2022 09:52 PM

ADVERTISEMENT

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 21) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனா்.

இதுகுறித்து புதுவை மாநில நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டுப் போராட்ட குழு கன்வீனா் எம். ஷேக் அலாவுதீன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி, உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என பல கடிதங்கள் கொடுக்கப்பட்டும், பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டும், போராட்டங்கள் நடத்தியும் ஊழியா் சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கையை தீா்த்து வைக்க புதுவை அரசு முன்வராத காரணத்தால், அண்மையில் தா்னா நடத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் 21ஆம் தேதி முதல் விடுப்பெடுத்து மாநிலம் தழுவிய அளவில் தொடா் போராட்டத்தில் ஈடுபட புதுவை மாநில நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்ட குழு முடிவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களும் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவா். போராட்டத்தை தவிா்க்க, காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 5 எம்.எல்.ஏ.க்களும் அரசிடம் பேசி இதற்கு தீா்வு காணவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT