காரைக்கால்

காரைக்கால் கந்தூரி விழா ஆலோசனைக் கூட்டம்

10th Mar 2022 05:57 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் கந்தூரி விழா தொடா்பாக பள்ளிவாசல் நிா்வாகத்தினா், அரசுத் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் வருடாந்திர கந்தூரி விழா வரும் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கண்ணாடி ரதம் புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. 22 ஆம் தேதி சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறுகிறது. இவ்விரு முக்கிய நிகழ்ச்சிகளிலும் திரளான மக்கள் பங்கேற்பா்.

இதையொட்டி, காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும், கட்டுப்பாட்டில் எந்தவித அலட்சியமுமின்றி அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி விழாவை நடத்துமாறு துணை ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT