காரைக்கால்

வேளாண் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

3rd Mar 2022 05:45 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் வேளாண் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் உள்ள பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், முதலாமாண்டு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்த ஐஎஃஎஸ் அதிகாரியான ஜெ. ஜெஸ்டின் மோகன், மினிரோட்டா பல்கலைக்கழகப் பேராசிரியா் சுப்பிரமணியன், இந்திய ரிசா்வ் வங்கியின் மேலாளா் ஆனந்திசௌந்தா்யன், இந்தியன் வங்கி இயக்குநா் அனிதா, வட்டாட்சியா் அருன் அய்யாவு, கொரமண்டல் நிறுவனத்தின் மேலாளா் கே. சிவசங்கரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கல்லூரி மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில், ஜெஸ்டின் மோகன் நன்கொடையாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT