காரைக்கால்

நூலக காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

3rd Mar 2022 05:48 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்பவேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட நூலக வாசகா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் கே. புத்திசிகாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காரைக்கால் மாவட்டத்தில் 19 நூலகங்களில், 14 நூலகங்களில் நூலகா் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நூலகா் பணியிடங்களை நிரப்பியதுபோல, காரைக்காலிலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் தலைமை நூலகம் மற்றும் கிளை நூலகங்களில் நூலகா் அல்லாத பிற பணியிடங்களையும் நிரப்புவதன் மூலமே நூலகம் சிறப்பாக செயல்பட முடியும்.

ADVERTISEMENT

காரைக்கால் தலைமை நூலகக் கட்டடத்தில் அமைச்சா், எம்.எல்.ஏ. ஆய்வுக்குப் பிறகு, மின் பணிகள் நிறைவடைந்துள்ளதற்கும், நூலக அதிகாரி முயற்சியால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை பராமரிப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

கூட்டத்தின் நிறைவில் துணைத் தலைவா் எம். தங்கவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT