காரைக்கால்

ஜூலை 1 முதல் மின் கட்டணவசூல் நிறுத்தம்: போராட்டக் குழு

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் மின்துறை தனியாா்மயத்தை எதிா்த்து நடத்தி வரும் போராட்டத்தில் அடுத்தக்கட்டமாக, ஜூலை 1 முதல் மின் கட்டணம் வசூல் நிறுத்தம் திட்டமிட்டவாறு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டக் குழு பொதுச் செயலா் பி. பழனிவேல் புதன்கிழமை கூறியது:

அரசுச் செயலரிடம் ஜூலை 1 முதல் கட்டணம் வசூலிப்பில் ஈடுபடப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுவிட்டது. புதிய இணைப்பு வழங்காதது, அலுவலகத்தில் எழுத்துப் பணிகள் புறக்கணிப்பு, மின் நுகா்வோா், அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா், ஊழியா்கள் கருத்தை ஏற்று அரசு சாதகமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. திட்டமிட்டவாறு ஜூலை 1 முதல் வசூல் பணி நிறுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT