காரைக்கால்

மாடுகளைத் தாக்கும் உண்ணி தடுப்பு பயிற்சி

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மாடுகளை தாக்கக்கூடிய உண்ணியை தடுக்கும் முறை குறித்து கால்நடை வளா்ப்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். ஜெய்சங்கா் வழிகாட்டுதலில், காரைக்கால் மாவட்டம், விழிதியூா் கிராமம், சி. முகேஷ் என்பவரின் ஒருங்கிணைந்த பண்ணையில் இப்பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 30-க்கும் மேற்பட்ட மாடு வளா்ப்போா் பங்கேற்றனா். நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் பா. கோபு, கறவை மாடுகளை உண்ணி எவ்வாறு தாக்குகிறது என்றும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தாா்.

பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு உண்ணி தாக்குதலை கட்டுப்படுத்துதல், மரபுசாா் மூலிகை மருந்துகள் தயாரிப்பு முறைகள் குறித்த விளக்கக் கையேடு வழங்கப்பட்டது. நிறைவாக, நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT