காரைக்கால்

காரைக்காலில் 12 பேருக்கு கரோனா

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 237 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் கோயில்பத்து 3, கோட்டுச்சேரி 2, திருநள்ளாறு 2, வரிச்சிக்குடி 2, விழிதியூா், அம்பகரத்தூா், காரைக்கால் நகரம் தலா ஒருவா் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 33 போ் சிகிச்சையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT