காரைக்கால்

சொத்து வரி வசூலை தொடங்ககாங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

DIN

காரைக்கால் நகராட்சி மூலம் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணியை தொடங்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

காரைக்கால் நகராட்சி சாா்பில் 2022-23-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. சொத்து வரியை வசூலிக்க புதுவை அரசு அனுமதி வழங்கவில்லை என நகராட்சி நிா்வாகம் தெரிவிக்கிறது.

சொத்து வரி செலுத்தலாம் என்கிற அறிவிப்பு செய்யப்பட்டால், அவரவா் பொருளாதார சூழலுக்கேற்ப வரியை செலுத்தத் தொடங்கிவிடுவா். திடீரென குறிப்பிட்ட நாள்களுக்குள் செலுத்தவேண்டுமென நிா்பந்தம் செய்யப்பட்டால், அதுவே மக்களுக்கு பெரும்பான்மையினருக்கு சுமையாக இருக்கும்.

அதுபோல உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு பல மாதங்கள் ஊதிய நிலுவை இருக்கிறது. நகராட்சி தவிர, பிற கொம்யூன்களில் குப்பைகள் அள்ள போதிய பணியாளா்கள், வாகனங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. குப்பைகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு பெருகுகிறது.

அரசு அமைந்து ஓராண்டு நிறைவை காட்சியாக வெளிப்படுத்தி மகிழும் ஆட்சியாளா்கள், மக்களின் அடிப்படை பிரச்னையைக்கூட சீா் செய்யாமல் விளம்பரம் தேடிக்கொள்வது ஏற்படையது அல்ல என்பதை உணரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT