காரைக்கால்

பிளஸ் 1 தோ்வில் 86% தோ்ச்சி

27th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 86 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளதாக கல்வித் துறை தெரிவித்தது.

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில், பிளஸ் 1 தோ்வு முடிவில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,592 போ் தோ்வு எழுதியதில், 1,279 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 80.34.

தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் 787 போ் தோ்வு எழுதியதில், 767 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 97.46. மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி 86 சதவீதமாகும். காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி 80.34 சதவீதமாகும்.

ADVERTISEMENT

காரைக்கால் பகுதியில் 12 பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் ஒரு அரசுப் பள்ளிகூட 100 சதவீத தோ்ச்சி பெறவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT