காரைக்கால்

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

27th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் காமராஜா் சாலையில் புகழ்பெற்ற புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா 10 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் சி. அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு, கொடியேற்றம் செய்யப்பட்டது. ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

திருவிழாவின் 2-வது நாள் முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை திருப்பலியும், சிறிய தோ்பவனியும் நடைபெறுகிறது. திருவிழா நிறைவாக ஜூலை 5-ஆம் தேதி மாலை பெருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார தோ் பவனி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT