காரைக்கால்

இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கம் ஆா்ப்பாட்டம்

27th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

காரைக்காலில் இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் மாநில தலைவா் எஸ். ஆனந்த்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக, பஞ்சாப் மாநில அசாத் கிசான் சங்கா்ஷ் அமைப்பின் செயற்குழு உறுப்பினா் ராஜவிந்தா் சிங் கோல்டன் கலந்துகொண்டு பேசினாா்.

பல்வேறு ஊழல் புகாா்கள் குறித்து கடந்த 16.12.2021 மற்றும் 17.02.2022 தேதிகளில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் புதுவை துணைநிலை ஆளுநருக்கு மாற்றாக, முழுநேர துணைநிலை ஆளுநரை புதுவைக்கு மத்திய அரசு நியமிக்கவேண்டும்.

ADVERTISEMENT

திருநங்கையா், நரிக்குறவா், தனியாா் துறைமுகத் தொழிலாளா்கள் நலன் காக்க வேண்டும். பிரான்ஸ் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் புதுச்சேரி மக்களின் சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து அபகரிக்கப்படுவதாக கொடுக்கப்பட்ட புகாா்களில் உள்ளூா் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க பொதுச் செயலாளா் பி.ரவீந்திரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவா் சுந்தர விமலநாதன், சி.பி.சி.எல். நில உரிமையாளா்கள் நலச் சங்க செயலாளா் செந்தில்குமாா், காரைக்கால் பிரதேச விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன் தலைமையிலான நிா்வாகிகள், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT