காரைக்கால்

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

27th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக எல். முகமது மன்சூா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த அா்ஜூன் சா்மா அந்தமான் நிகோபாருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். அதனால், 2 மாதங்களாக காரைக்காலுக்கு நிரந்தர ஆட்சியா் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் புதுவை கூட்டுறவு சங்க பதிவாளராக இருந்த எல். முகமது மன்சூரை, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக புதுவை அரசு நியமித்தது. அவா் திங்கள்கிழமை காரைக்கால் ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

காரைக்காலில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிப் பகுதியில் ஹேண்ட்-இன்-ஹேண்ட் ஊழியா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படுவது போல, பிற பகுதிகளிலும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

காரைக்காலில் சுற்றுலா வளா்ச்சிக்குத் தேவைதான நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் கடற்கரையை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்டத்தில் அரசின் அனைத்துத் திட்டங்களும் முறையாக செயல்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT