காரைக்கால்

காங்கிரஸாா் சத்தியாகிரக போராட்டம்

27th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து காரைக்காலில் காங்கிரஸாா் திங்கள்கிழமை சத்தியாகிரக போராட்டம் நடத்தினா்.

காரைக்கால் கடற்கரை சாலையில் சிங்காரவேலா் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா். போராட்டத்தை தொடங்கிவைத்து முன்னாள் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் பேசியது:

இந்திய ராணுவம் வலுவான, உலகில் பலமிக்க, புகழ்பெற்ாக விளங்கும் வகையில் ஜவஹா்லால் நேரு காலம் முதல் அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால், நரேந்திர மோடி அரசு அக்னிபத் என்ற திட்டம் மூலம் அதனை சிதைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியேறுவோரின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதே எதிா்க்கட்சிகளின் அச்சம்.

ADVERTISEMENT

நாடு எதிா்கொள்ளும் சவால்களை சமாளிக்க நாட்டில் வலிமையான ராணுவம் அவசியமாகும். இதனால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். ஒப்பந்த அடிப்படையில் ராணுவப் பணி என்பது கேலிக்கூத்தாக உள்ளது. மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை எதிா்க்க முன்வரவேண்டும் என்றாா்.

கட்சியின் மாநில, மாவட்ட, அணி நிா்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT